ஞாயிறு, 9 நவம்பர், 2014

புலப்படா ஒலிகள்

அவன்
ஒலிக்கவிட்ட பாடல்கள்
நான் அறிந்திருக்கவில்லை .......
ஒலித்ததின் விழைவு  
புரிந்தும் தெளிந்திருக்கவில்லை .........
என் தனிமை கணத்தில்
நான்
இசைக்கவிடுகையில்
எனென்றும் எதற்கென்றும்
புலப்படாது சிறு
கள்ளப்புன்னகை மட்டும்
வளைகிறது .....



புதன், 5 நவம்பர், 2014

இலையுதிர் காலம்

நானும் மற்றுமொரு
சருகென பிரிகிறேன்....
நதியின் சலசலப்பில்
தொலைந்து மேலெழும்புகிறேன்...
வண்ணம் மாறி
எண்ணம் மாறி
நான் வகுத்திடா
விதிகளை அனுசிரிக்கிறேன்...
அறிந்திராத திருப்பங்களில்
சற்றே தள்ளாடுகிறேன்....
அமிழ்ந்தும் எழுந்தும்
நீரின் திசையோடு
பயணிக்கிறேன் ....
கண்டிராக்   காட்சிகளினோடு
பயணம் மாத்திரமே
நிதர்சனம் என்றாகிறது
 எனக்கு....

புதன், 2 ஜூலை, 2014

சட்டென ஒரு சாரல்

சட்டென  ஒரு சாரல்


 எங்கோ ஒரு 
புதிய ஊரில் 
வேரோ கிளையோ 
தேடி அலையும் 
கனத்த நாட்களில்... 
என் பூமி காலடியில் 
தொலைந்து கொண்டிருக்கையில் 
சட்டென 
கொட்டிவிட்ட மழை
என்னை ஏதோ ஒரு 
புலப்படா 
இழையோடு இணைக்கிறது ... 

ஞாயிறு, 8 ஜூன், 2014

அந்தியில் தெளித்த வண்ணங்கள்




 ஏன் புன்னகைக்கிறேன்
எனப் புலப்படாது திரிகிறேன்...
மையலும் இல்லை
மயக்கமும் இல்லை...
எழுதிவைத்த விதிகள்
எதிலும் அகப்படவில்லை...
அந்திக்குள் குழைந்துவிட்ட
பகலின் மிச்சத்தின்போது
என் மேல் பூசிய
வண்ணங்கள்
கொண்ட கோலம் காண
புலர்ச்சிக்காகக்
காத்திருக்கிறேன்...