திங்கள், 21 அக்டோபர், 2013

முரண்

தீக்குழி ஒன்றை
பேணி வைத்துள்ளேன்
என்னுள்..
எந்நேரமும் தீக்கங்குகள்
இங்கும் அங்கும் சிதறித்
தகிக்கின்றன... அதில்
நேசங்கள் சில
நேரங்களில்
கருகி விடுகின்றன...
எனினும் அதன்
பிழம்புகள்  என்
தன்மையின்
தண்மைக்கு இதம் பரப்புகின்றன...



இதுவும் ஒரு கணம்தான்

அன்றோர் நாள்
உன்னோடு நின்று
பருகிய அந்த
ஒரு குவளைக் குழம்பி
இன்று கசக்கிறது...

இது ஒரு வகை தித்திப்பு

             இது ஒரு வகை தித்திப்பு

அந்தியில் பெய்த மழையில்
நனைந்து கிடக்கும் தார் சாலை
மெர்க்குரி வெளிச்சம்
பூசிக் கொண்டு நீண்டு கிடக்கிறது..
இருள் படரும் நேரமாகிவிட்டது..
எங்கோ தூரத்தில் மெலிதாக
கசிகிற என்
நேசமிகு பாடல்...
கேசம் கலைக்கும் காற்று..
இளஞ்சூட்டில்
சாலை ஓரத் தேநீர்...
துணையாக
ஒரு மென்சோகமும்...
இந்நிமிடம் இனியது...