புதன், 21 நவம்பர், 2012

அவனொருவனின் அயல்மொழி

              அவனொருவனின் அயல்மொழி 


என் காதலன் ஒருவன் இருந்தான்!
நினைத்த பொழுதிலெல்லாம்
சிலிர்ப்பூட்டியவன்!
சட்டென கன்னக்கதுப்புகளைக்
குழையச் செய்து விடக்கூடியவன்!
கனவுகள் விரியும் இள
மாலை வேளையில்
மஞ்சள் பூக்கள் பரவிய சாலையில்
அவனோடு மென்னடை பயில
ஆவல் கொண்டேன்!
உணர்ந்த நேசம் பகிர
உள்ளம் முனையும் முன்
அன்றொரு இருண்ட கணத்தில்
என் புன்னகையும் களவுகொண்டு
நானறியா  மொழியாகிவிட்டான்!






புதன், 8 ஆகஸ்ட், 2012

unakkana en pathivugal

உனக்கான என் பதிவுகள்


அங்கொன்றும்  இங்கொன்றுமாய் 
நினைவுகள் ...
சிதறிக் கிடப்பவை சிதையும்  முன் 
கோர்த்து  விட முயல்கிறேன்..

எனினும் 
உன்னுடன் நூற்றிய 
கானல் நூல் அல்லவா 
கொணர்ந்துள்ளேன்..
நிலம் தொட்டும்  
விழுதுகள் வேரூன்றாது 
விலகிய கிளையாகினேன் நான்..
மரத்து(மாகி)  விட்டாய் நீ..  

புதன், 4 ஜூலை, 2012

vidiyum rapozhuthugal

                     விடியும் இராப்பொழுதுகள் 



இளகும் இரவுக்குள்
ஒளிந்து நாளைய
பகலில் புலர்கிறேன்...என்
புன்னகையில் ஒரு 
அங்குலமேனும் குறைவதாகவே
அறிகிறேன் ஒவ்வொரு வைகறையிலும்...
கனவுகளின் அடர்த்தி
குறைந்திருக்கவும் இல்லை
எனினும் அவற்றை  வாழ
முனைந்திருக்கவில்லை
நேற்று வரையிலும்...
பொருளறிந்த பொழுதில்  மலர்கிறோம்
நானும் வானமும்.. 

செவ்வாய், 3 ஜூலை, 2012

en karpanai oorthi


                            என் கற்பனை ஊர்தி 

அண்டை  வீட்டுக்காரனின்
கனவுகள் கலைந்ததில்
என்  உறக்கம் தொலையக்  கூடாததுதான்...
எனினும் அவரின்
அச்சாணிப்  பழுதுகள் சரிபார்க்கப் பட்டிருக்கவில்லை..
இசையாத என் வண்டியோட்டிக்கும்
சக பயணிகளுக்கும் தம்மோடு வாழவே
சமயக்  குறைவுள்ளதால் (மனிதமும்)-அகமடைந்தவுடன்
நான் பயணித்திராத ஊர்தி கொண்டு 
பின்னோடு வருகிறேன்
பிழைத்திருங்கள்  முகந்தேடும்
மொழிப் பங்காளர்களே !