உனக்கான என் பதிவுகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நினைவுகள் ...
சிதறிக் கிடப்பவை சிதையும் முன்
கோர்த்து விட முயல்கிறேன்..
எனினும்
உன்னுடன் நூற்றிய
கானல் நூல் அல்லவா
கொணர்ந்துள்ளேன்..
நிலம் தொட்டும்
விழுதுகள் வேரூன்றாது
விலகிய கிளையாகினேன் நான்..
மரத்து(மாகி) விட்டாய் நீ..
Memories ... The real treasure within us. The double-edged sword which can warm us from within and tear us apart on the outside!
பதிலளிநீக்குVery much true...well said drmenz:)
பதிலளிநீக்கு