சனி, 20 ஜூலை, 2013

நானென்ற ஒரு பிறழ்ச்சி

ஈரமாகிக் கிடக்கிறது என் உலகம்
உள்ளும் புறமும்..
நெகிழ்ந்து திரிகிறேன்..
கவிதையும் காதலுமாய் உலவுகிறேன்..
நீலமும் பச்சையும்  தாண்டி
நீளமும் அகலமும் அல்லாத
ஒரு வெளி
எனக்குள் விரிந்துக்கிடக்கிறது..
வினாக்களும் விடைகளும்
கலைந்து சிதறி விழுந்திருகின்றன
என்னென்று புரிந்துணருவேன்..
கோப்புகளுக்குள் அடங்கிவிடா
இசைவுபிறழ்வு நான்
எனத் தெளிகிறேன்...

4 கருத்துகள்: